Entertainment
கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு கொடுத்த கமல் பட நாயகி

இன்று தமிழகம் முழுவதும் கைத்தறி தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கைத்தறி நெசவாளர்கள் குறித்த ஒரு டுவிட்டை பதிவு செய்து இருந்தார். அந்த டுவீட்டில் அவர் கூறியதாவது:
கைத்தறிகள் நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண். கைகளில் வண்ணம் செய்யும் அவர்களைக் கைவிடாது காத்தல் நம் கடமை மட்டுமல்ல, நம் பெருமையும் கூட. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கைத்தறி பொருட்களை பயன்படுத்துதல் தான் அக்கலை காக்கப்பட,இந்த தேசிய கைத்தறி தினத்தில் நம் கடமை. நாமே தீர்வு
இந்த நிலையில் கமலஹாசனின் ’இந்தியன் 2’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ரகுல் ப்ரீத்திசிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைத்தறியில் நெய்யப்பட்ட ஒரு சேலையை அணிந்து போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இருந்தார்
அதில் அவர் கூறியிருப்பதாவது: கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் கைத்தறியில் நெய்யப்பட்ட உடைகள் மிகவும் அழகாக இருப்பதாகவும் அவர்களுக்கு நாம் என்றும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ரகுலின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
