பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளர் ரக்சிதாவின் கணவரா? என்ன நடக்கும்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளர் உள்ளே வர இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உள்ளே போட்டியாளராக இருக்கும் ரக்சிதாவின் கணவர் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பதும் 8 போட்டியாளர்கள் வெளியேறி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

rakshitha husband

இந்த நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்றும் ஒரு போட்டியாளர்கள் புதிதாக உள்ளே வருவார் என்றும் கூறப்படுகிறது. வைல்ட்கார்ட் போட்டியாளர் வர இருப்பதை டிஸ்னி ஹாட்ஸ்டார் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் வைல்ட்கார்ட் போட்டியாளராக வருபவர் ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளர் ஆக இருக்கும் ரக்சிதாவின் கணவர் என்று கூறப்படுகிறது. ரக்சிதா மற்றும் அவரது கணவர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் திடீரென கணவன் மனைவி ஒரே வீட்டில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரிந்த இருவரும் மீண்டும் இணைவார்களா? அல்லது மேலும் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.