கொரோனா பரவல் இந்தியாவில் கடந்த வாரத்திலிருந்து அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனைகள் மிக அதிகமாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தினசரி அதிகமான கொரோனா பாதிப்புகள் வெளியில் தெரிகின்றன.
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சமீபத்தில்தான் மீண்டனர்.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதனால் இவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை பரிசோதித்துக்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.