அஜித்தை என்னால் அடிக்க முடியவில்லை – ஷாக் கொடுத்த முக்கிய சினிமா பிரபலம்!

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பாலும் விட முயற்சியாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கட்டமைத்து வைத்திருப்பவர் அஜித் குமார். இவரது ரசிகர்கள் இவரை பாசமாக “தல” என அழைப்பது உண்டு. ஆனால் தல என்று அழைக்காதீர்கள் என பலமுறை ரசிகர்களுக்கு எடுத்துரைத்துள்ளார் இருந்தாலும் ரசிகர்களின் அளவு கடந்த பாசத்தால் அதை ஏற்க மறுக்கிறார்கள்.

ajith trip - 6

இவரது ரசிகர்கள் மட்டும் அல்ல தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் கூட இவரை செல்லமாக தல என்று தான் அழைத்து வருகிறார்கள். தற்போது தமிழ் சினிமாவின் பிரபல முன்னாள் நடிகர் ஒருவர் அஜித்தை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் அஜித்துடன் படப்பிடிப்பில் நடைபெற்ற அவரை பற்றிய வியப்பூட்டும் உண்மைகளை பகிர்ந்துள்ளார். அது நடிகர் யார் என்றால் நமது ராஜ்கிரண்தான்.

கைதி 2 படத்தில் வில்லனாக களமிறங்கும் டாப் ஹீரோ? தெறிக்க விடும் லோகேஷ்!

அவர் அஜித்துடன் கிரிடம் படத்தில் இணைந்து நடித்துள்ளார். அப்போது அஜித்க்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் அவரின் நற்குணக்களையும் தற்போது பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது “அஜித்தால் சிறிது நேரம் கூட உட்கார முடியாது. அவருக்கு எப்போதும் கடுமையான முதுகு வலி இருக்கும். ஆகையால் அவர் நடந்து கொண்டேதான் இருப்பார்.

அப்போது அவரிடம் எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்.நீங்கள் கேட்டால் ஒருநாள் என்ன ஒரு வாரம் கூட விடுமுறை கிடைக்கும் என்று கூறிஉள்ளார். அதற்க்கு தல அஜித் தயாரிப்பாளர் என்னை நம்பி படம் எடுத்துள்ளார் ஆகையால் அவருக்கு என்னால் எந்த ஒரு நஷ்டத்தையும் ஏற்படுத்த முடியாது எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.”

துணிவு படத்தின் ஜில்லா..ஜில்லா பாடலுக்காக தனது ஆட்டத்தை ஆரமித்த அஜித்! மாஸ் அப்டேட்!

இதனை கேட்ட ராஜ்கிரன் மிகவும் நெகிழ்ந்துள்ளார். மேலும் ராஜ்கிரணுக்கு அஜித்தை அடிக்கிற போல ஒரு ஷார்ட் அமைத்தது. அதனை என்னால் அஜித்திடம் பண்ணவே மனம் வரவில்லை எனவும் பகிர்ந்துள்ளார். பின்னர் அஜித் ஒன்றுமில்லை தைரியமாக பண்ணுங்கள் என கூறினாராம். இதனை ஒரு தனியார் தொலைக்காட்சியில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட அஜித் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.