
Entertainment
15 வருடத்திற்கு முன் ரஜினியின் சம்பளம் தெரியுமா? படத்திற்காக வாங்கும் அட்வான்ஸ் இவ்வளவு தானா!
ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி, இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும்,ஸ்ரேயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்தில் விவேக், , மணிவண்ணன், சுமன், வடிவுக்கரசி போன்ற பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை சங்கர் மிக பிரமாண்டமான முறையில் உருவாக்கி இருந்தார் அதற்கு
ஏற்றாற்போலவே இந்த படமும் வேற லெவலில் ஹிட்டானது அதேபோல் வசூல் சாதனையும் அடைந்தது.இந்த படத்தில் காமெடி காட்சிகளில் சாலமன் பாப்பையாவும் நடித்திருப்பார்.
இந்த படத்தின் முழுப்பெயர் சிவாஜி தி பாஸ் என திரைப்படத்திற்குப் பெயரிடப்பட்டது.ஏ. ஆர். ரகுமான் இசையில் 84 கோடி பொருட்ச்செலவால் இந்த படம் உருகாக்கப்பட்டது.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் ஷங்கரே நடிகர் ரஜினியை நேரில் சந்திதுள்ளார்.அப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிய நிலையில் அதற்கான கொண்டாட்டமாக ரசிகர்கள் ஏற்கனவே பதிவுகளை வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த சந்திப்பின் போது ரஜினி ஷங்கர் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது
இந்நிலையில் இந்த படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் தான் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஜினி இந்த படத்திற்காக வெறும் 18 கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார்,மேலும் சிவாஜி படத்திற்காக அவர் வாங்கிய அட்வான்ஸ் 1000 ரூபாய் மட்டும் தானாம்.
மேலும் ஒரு சிறப்பாக இந்த படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில் இருப்பதால் படத்திற்கு வரி சலுகை ரத்து செய்யப்பட்டது.இதை அறிந்த ரஜினி உடனே தனது சம்பளத்தில் 30 சதவீதத்தை வேண்டாம் என குறைத்துக்கொள்ள கூறியுள்ளாராம்.
அதாவது அவரது சம்பளம் 18 கோடியில் இருந்து 30 சதவீதத்தை வரி விலக்கு நஷடத்திற்க்காக ஏற்றுக்கொண்டுள்ளாராம், வெறும் 12இலட்சத்து 60 ஆயிரம் மட்டுமே சம்பளமாக இறுதியாக வாங்கியுள்ளார்.
தற்போழுது ரஜினி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டும் அல்லாமல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
திரிஷாவுக்கு வந்த அரசியல் ஆசை! இந்த ஆசை எப்போதில் இருந்து?
