ரஜினிகாந்த் உடல்நிலை: தனி விமானத்தில் ஜூன் 19ல் அமெரிக்கா செல்கிறார்!

231d2d68e4d4f8244dc1869b8e89a8a6-1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அமெரிக்கா செல்ல உள்ளார் என ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் ஜூன் 19-ஆம் தேதி அவர் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

ரஜினிகாந்த் செல்லவிருக்கும் தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும் இதனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் ஆகியோர் அமெரிக்காவில் தான் உள்ளனர் என்பதும் அவர்கள் ரஜினிகாந்த் குடும்பத்தினரை வரவேற்று உடல் பரிசோதனைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது 

ரஜினிகாந்த் அமெரிக்காவில் மூன்று மாதங்கள் தங்கி இருப்பார் என்றும் அதன் பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சென்று உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்ளும் நிலையில் இந்த ஆண்டும் அவர் அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.