ரஜினிகாந்த் உடல்நிலை: தனி விமானத்தில் அமெரிக்கா பயணம்!

a18a35bdf6468481bb4b8049494ba319

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் இதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது அமெரிக்கா சென்று தனது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வார் என்பது தெரிந்ததே. அவருடன் அவருடைய மகள் செல்வது வழக்கம். இந்த நிலையில் தற்போது அவர் அமெரிக்காவுக்கு சிறப்பு விமானத்தில் பயணம் செல்ல ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் இந்த விமானத்தில் 14 பேர்கள் செல்லலாம் என்பதால் தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 

இந்த தனிசிறப்பு விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும் ரஜினிக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சர்கள் இருவர் உதவி செய்ததாகவும், அதில் ஒருவர் தமிழர் என்றும் கூறப்பட்டு வருகிறது 

இதனை அடுத்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்கா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் டப்பிங் மட்டுமே பாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.