Connect with us

ரஜினியின் ‘சிவாஜி தி பாஸ்’ பாகம் 2 – தயாரிப்பாளர் அருணா குகன் கொடுத்த அப்டேட்!

18 sivaji rajini 600

பொழுதுபோக்கு

ரஜினியின் ‘சிவாஜி தி பாஸ்’ பாகம் 2 – தயாரிப்பாளர் அருணா குகன் கொடுத்த அப்டேட்!

ரஜினிகாந்தின் சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்று ‘சிவாஜி’. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பழமையான ஏவிஎம் தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.

கடந்த 2007ம் ஆண்டு வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பல வித சாதனைகளை செய்ததோடு தமிழ் சினிமாவை இந்திய அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. 60 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.152 கோடி வசூல் செய்தது

Sivaji 3D 1

தற்போழுது வெற்றி படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் சிவாஜி படத்திற்கும் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற புதிய வெப் சீரிஸின் விளம்பர நிகழ்வின் போது தயாரிப்பாளர் அருணா குஹன், ‘சிவாஜி: தி பாஸ்’ பாகம் 2, நல்ல ஸ்கிரிப்ட் மற்றும் கதை இருந்தால், ரஜினிகாந்த் நடித்த படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

maxresdefault 4 6

வேக வேகமாக மருத்துவமனைக்கு செல்லும் தளபதி விஜய் ! இணையத்தில் வெளியான வாரிசு ஷூட்டிங் !

யாராவது நல்ல கதையுடன் வந்தால் அடுத்த பாகத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார்.’சிவாஜி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top