Connect with us

ட்விட்டரில் மாஸ் காட்டும் ரஜினியின் ‘ஜெயிலர்’ போஸ்டர்..! டிசைனர் யாரு தெரியுமா ?

whatsapp image 2022 08 22 at 3 26 07 pm

பொழுதுபோக்கு

ட்விட்டரில் மாஸ் காட்டும் ரஜினியின் ‘ஜெயிலர்’ போஸ்டர்..! டிசைனர் யாரு தெரியுமா ?

ரஜினிகாந் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போழுது சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கயுள்ளனர்.இந்த படத்தில் பிரியங்கா அருள் ரஜினிக்கு மகளா நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

rajinii ti 1 1 1 1

படத்தில் இளம் ஹீரோ வசந்த் ரவி ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்கயுள்ளார், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக இவர் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.ரஜினியின் ஜெயிலர் படத்தின் பூஜை ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்ததாகவும் ஆகஸ்ட் 22ஆம் ரஜினி இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் படி ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் அப்டேட் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தது.

இந்நிலையில், ‘22.8.22 – 11:00 AM #Jailer’ என்ற கேப்ஷனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சோசியல் மீடியாவில் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் உள்ளது.

ஷாருக்கானின் ஜவான் படப்பிடிப்பு சென்னையில்லையா ? கேமியோவாக வரும் தீபிகா படுகோன் !

unnamed 14 1

இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.இந்த போஸ்டரை டிசைன் செய்த டிசைனர் யார் என்ற தகவல் தற்போழுது கிடைத்துள்ளது.சிவம் சி கபிலன் தான் இந்த படத்தின் போஸ்டரை வடிவமைத்துள்ளார். இவர் முன்னதாக கோப்ரா, திருச்சிற்றம்பலம், நட்சத்திரம் நகர்கிறது, காட்பாதர், ஆர் ஆர் ஆர், விருமன், வாத்தி, வணங்கான், லைகர், பிரின்ஸ், வெந்து தணிந்தது காடு, ராதே ஷ்யாம், சாணிக் காயிதம் போன்ற படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்தவர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top