Connect with us

ரஜினியின் ஜெயிலர் படத்தில் வில்லனாகும் மிரட்டல் நடிகர்! மாஸ் அப்டேட் !

rajinikanth 1576544804

பொழுதுபோக்கு

ரஜினியின் ஜெயிலர் படத்தில் வில்லனாகும் மிரட்டல் நடிகர்! மாஸ் அப்டேட் !

ரஜினியின் 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் உள்ளது.இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

jailer

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்ஷத்திரங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்ட்து, இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தற்பொழுது ரஜினிக்கு வில்லனாக மாலிவுட் நடிகர் விநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் மலையாளப் படமான ஒருத்தியின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது, ​​பெண் பத்திரிகையாளரிடம் விநாயகன் பேசிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

203851 thumb 665

விஷால் நடித்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் மலையாள நடிகர் விநாயகன். மலையாளத்தில் கம்மட்டிப்பாடம் என்கிற படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார் விநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை தவிர தற்காப்பிலும் ஆர்வம் காட்டும் சமந்தா! அப்படி என்ன கத்துக்குறாங்க ?

203680 thumb 665

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top