ரஜினியால் திடீரென டிரெண்டான ‘விஸ்வாசம்’ திரைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது மகளின் ஹூட் செயலியில் ‘விஸ்வாசம்’ படம் குறித்து குறிப்பிட்டுள்ள நிலையில் திடீரென ‘விஸ்வாசம்’ படத்தின் டைட்டில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த திரைப்படம். கடந்த தீபாவளியன்று வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். தனது மகளின் ஹூட் செயலியில் பதிவு செய்யப்பட்ட இந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது:

விஸ்வாசம்’ போல் ஒரு கதை இருந்தால் கூறுங்கள் என இயக்குனர் சிவாவிடம் கூறினேன். அவரும் ’அண்ணாத்த’ கதையை கூறினார். எனக்கு மிகவும் பிடித்தது. அதை அப்படியே எடுக்க வேண்டும் என்றேன். ஆனால் அவர் அதை விட சிறப்பாக எடுத்துள்ளார் என்று கூறினார்

மேலும் இன்னொரு பதிவில் ’வில்லேஜ் கேரக்டர், நல்ல கதை, அது இரண்டும் இரண்டும் போதும் என்று சொன்னார் சிவா. ’அண்ணாத்த’ படத்தோட கதையை சொல்லச் சொல்ல கிளைமாக்ஸ் வரும் போது என் கண்ணை கலங்கிவிட்டது. அப்படியே அவருக்கு கைகொடுத்து இதே மாதிரி படம் எடுங்க என்று சொன்னேன்’ என்று கூறினார். மேலும் ’சார் இந்த படம் வந்ததும் உங்கள் ரசிகர்கள் மட்டுமில்லாமல் எல்லோரும் பார்ப்பார்கள் என்று சொன்னார், அதே மாதிரியே சொல்லி அடித்திருக்கிறார்’ இவ்வாறு ரஜினிகாந்த் ஹூட் செயலியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ‘விஸ்வாசம்’ படம் குறித்து ரஜினிகாந்த் கூறியதை அடுத்து ‘விஸ்வாசம்’ படத்தை டுவிட்டரில் அஜித் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment