Connect with us

காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல: ரஜினிகாந்த்

Entertainment

காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல: ரஜினிகாந்த்

20c4389dd1eba14b71712668f6a2ead8-1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் கர்நாடகாவில் மட்டும் இந்த படம் வெளியாவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முதல்வர் குமாரசாமி இந்த படத்தை கர்நாடகத்தில் ரிலீஸ் செய்தால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார். மேலும் கன்னட திரைப்பட வர்த்தக சபை இந்த படத்தை ரிலீஸ்செய்ய தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில் ‘காலா’ படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு. காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

dfb23a27999e46e8fff754c030cc96e1படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top