
பொழுதுபோக்கு
மாதவனின் ராக்கெட்ரி படம் குறித்து ரஜினிகாந்த் பாராட்டு!!
நடிகர் மாதவன் இயக்கத்த்தில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் ராக்கெட்ரி நம்பி விளைவு.
இப்படம் ஜூலை 1-ஆம் தேதி இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தை கொடுத்ததற்காக நன்றிகள் என நடிகர் மாதவனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அதாவது ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றும் குறிப்பாக இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணன் அவர்களின் வரலாற்றை மிக தத்ரூபமாக நடித்து படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையான தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன் என குறிப்பிட்டுள்ளார்.
@ActorMadhavan #Rocketry pic.twitter.com/bmQpoY7fsR
— Rajinikanth (@rajinikanth) July 4, 2022
