மற்றவர்கள் சத்தம் போட்டல் போடட்டும். ரஜினி குறிப்பிட்டது யாரை?

29bb7147d780cb5bceef2213fa92b5bdசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று சென்னையில் நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை செய்தார். இதுவரை மற்ற மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் காணொளியில் ஆலோசனை செய்த ரஜினி, நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை மட்டுமே நெரில் அழைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் பேசியபோது, ‘இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்திக்கின்றேன்.. அனைத்து ரசிகர்களையும் சந்திக்க சில நாட்கள் ஆகும். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் வேலையை அமைதியாக வேலை செய்வோம். எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுத்தர தேவையில்லை; அவர்கள்தான் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள்.

அரசியலில் அடிப்படை கட்டமைப்பு தான் முக்கியம். பெரிய கட்சிகள் தோல்விகளை சந்தித்தாலும் அதன் கட்டமைப்புதான் அந்த கட்சிகளை பாதுகாத்து வருகிறது. குடும்பத்துக்குள் ஒற்றுமை எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி கட்சிக்குள்ளும் இருக்கவேண்டும். ரஜினி மக்கள் இயக்கம் 32 ஆண்டுகளாக கவனத்துடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது; இதனை மேலும் பலப்படுத்துவதே நமது நோக்கம்’ என்று கூறியுள்ளார்.

இதில் மற்றவர்கள் சத்தம் என்பது சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சனம் செய்பவர்களைத்தான் ரஜினி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print