சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் அமெரிக்காவுக்கு கிளம்பியுள்ளார்
இன்று காலை அவர் தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் சென்னை விமான நிலையத்தில் தயாராக நின்றிருந்த தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டார். ரஜினிகாந்துடன் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் உட்பட குடும்பத்தினரும் அமெரிக்கா சென்று உள்ளனர் என்று கூறப்படுகிறது.. ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் காரில் வந்து இறங்கும் காட்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அமெரிக்காவில் ரஜினிகாந்த் மூன்று மாதங்கள் தங்கியிருப்பார் என்றும் அவர் தனது முழு உடல் பரிசோதனை செய்து முடித்த பின்னர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது ஏற்கனவே ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் அவர்கள் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
#Rajinikanth | மருத்துவ பரிசோதனைக்காக தலைவர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டார். #Superstar Rajinikanth.
Return Stronger than Ever #Thalaivaa ❤️#Thalaivar #Annaatthe@RangarajPandeyR @MaridhasAnswers @RIAZtheboss @mayavarathaan @itisprashanth @rameshlaus pic.twitter.com/E2u3PEPxZN
— Rajinikanth Fans (@Rajni_FC) June 19, 2021