செளந்தர்யா ரஜினியின் குரல் வழி சமூக வலைத்தளம்: தொடங்கி வைத்தார் ரஜினி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று தாதாசாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டதை அடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஆளுநர் கேன்.என் ரவி மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு பக்கம் இன்று தாதா சாகிப் பால்கே விருது கிடைத்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய Hoote’ என்ற செயலியை ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்தார்.

இதுவரை வெளியாகியுள்ள சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய டைப் அடித்து எழுத்துக்களால் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிந்த நிலையில் இந்த சமூக வலைத்தளத்தில் குரல்வழி மூலம் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலுள்ள எந்த மொழியில் வேண்டுமானாலும் குரலில் கருத்துக்களைப் பகிரலாம் என்ற வசதியுடன் Hoote’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ரஜினிகாந்த் அவர்களுக்கு தமிழ் எழுத தெரியாது என்றும் அவர் தனது அரசியல் ட்வீட்களை என்னிடம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி பதிவு செய்யச் சொல்லும்போது தான் இந்த ஐடியா தனக்கு வந்ததாகவும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment