கல்கத்தாவுக்கே காப்பு கட்டிட்டேன்: ரஜினியின் ‘அண்ணாத்த’ டிரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினியின் சூப்பரான ஸ்டைல், நயன்தாராவின் அழகான ரோமன்ஸ், மீனா மற்றும் குஷ்புவின் கேரக்டர்கள், கீர்த்தி சுரேஷின் தங்கை கேரக்டர், சூரியின் காமெடி, பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெகபதிபாபுவின் வில்லத்தனம், அபிநயம் சிங் கொடூர வில்லன் உள்பட பல காட்சிகள் இந்த ட்ரைலரில் உள்ளது.

அதே போல் டி இமானி மெலடியான இசை மற்றும் ஆக்சன் காட்சிகளுக்கான பின்னணி இசை, எடிட்டர் ரூபன் அற்புதமான பணி, வெற்றி பழனிச்சாமியின் மிக அபாரமான ஒளிப்பதிவு இந்த படத்தின் பிளஸ் அம்சங்களாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிரைலரில் ஆங்காங்கே வரும் வசனம் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில வசனங்களை தற்போது பார்ப்போம்.

’நீ யார் என்பது நீ சேர்த்து வைத்த சொத்துக்கள் மற்றும் உன் மேல் வைத்திருக்கும் பயத்தில் இல்லை. நீ செய்த செயல்களிலும் நீ பேசுற பேச்சிலும் இருக்கிறது, இது வேத வாக்கு’

’கடவுள் கொடுக்கும் எல்லா செல்வத்தையும் என் தங்கச்சி கொடுக்க சொல்லுங்க’

’வாழ்க்கையில் எத்தனையோ எதிரிகளை நான் பார்த்திருக்கிறேன், முதல் முறையாக என்னை கண்ணீர் சிந்த வைத்த எதிரி நீ, உன்னை அழிப்பது என் கடமை அல்ல, உரிமை’

’நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள பிள்ளைக்கு அந்த சாமியே இறங்கி வந்து அவளுக்கு துணையாக நிற்கும்’

’கல்கத்தாவுக்கே காப்பு கட்டிட்டேன், எஙக ஊரு மதுர வீரன் சாமிக்கு உன்னை நேர்ந்து விட்டுட்டேன்’

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment