ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: நலமுடன் இருப்பதாக டுவிட்டரில் தகவல்

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நேற்று இரவு டிஸ்சார்ஜ் ஆன பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடு திரும்பிவிட்டேன் என்று அவர் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் செயலியில் நான் நலமுடன் இருக்கிறேன், நல்லபடியாக வீடு திரும்பிவிட்டேன், என்னுடைய உடல் நலம் தேற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவு செய்து உள்ளார்

மேலும் ரஜினிகாந்த் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக வெளியான தகவலை அடுத்து அவரது வீட்டின் முன் ரசிகர்கள் கூடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் வீடு திரும்பியதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print