ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் அவருக்கு முழு உடற் சோதனை செய்ததில் ரத்த நாள திசைகளில் பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த பிரச்சனையை சரிசெய்ய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் பூரண ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி நாளை காலை ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது பூரண குணமாகி விட்டதாகவும் இருப்பினும் அவர் இன்னும் சிறிது நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment