Connect with us

ரஜினிகாந்த்-நயனின் சூப்பர் ஸ்டில்: ‘சாரக்காற்றே’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

annatha song nayan scaled

பொழுதுபோக்கு

ரஜினிகாந்த்-நயனின் சூப்பர் ஸ்டில்: ‘சாரக்காற்றே’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரஜினிகாந்த்-நயனின் சூப்பர் ஸ்டில்: ‘சாரக்காற்றே’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்து உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் அந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவுக்கு ‘சாரக்காற்றே’ என்ற பாடல் படத்தில் இருப்பதாகவும், இந்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த பாடலின் ஸ்டில் ஒன்று வெளியிட்டுள்ள நிலையில் அட்டகாசமாக இருக்கும் இந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடிய உள்ளதாகவும் இந்த பாடலை கேட்க ரஜினி மற்றும் நயன்தாரா ரசிகர்கள் செம ஆர்வத்துடன் உள்ளனர். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பதால் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top