சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் ’இது வழக்கமான உடல் பரிசோதனை தான் என்றும், ரஜினிகாந்த் உடலுக்கு வேறு ஒன்றும் இல்லை என்றும், அவர் நலமுடன் இருக்கிறார் என்றும், ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வதை ரஜினிகாந்த் வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் அந்த வகையான பரிசோதனை செய்யவே அவர் மருத்துவமனை சென்று இருப்பதாகவும் கூறியுள்ளார்

இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் இன்று இரவு அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment