கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்: பரபரப்பு தகவல்!

உலக நாயகன் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கமல்ஹாசன் விரைவில் குணமடைய வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கமல்ஹாசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவல் ஊடகங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment