Connect with us

சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணையும் ரஜினி ! வெளியான சர்ப்டைஸ் நியூஸ் !

Siva Karthikeyan Remo

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணையும் ரஜினி ! வெளியான சர்ப்டைஸ் நியூஸ் !

நடிகர் ரஜினி சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்ஷத்திரங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது, இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

jailer 1

தற்பொழுது ரஜினிக்கு வில்லனாக மாலிவுட் நடிகர் விநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் பிரியங்கா அருள் ரஜினிக்கு மகளா நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்தபடம் குறித்த மாசானதகவல் தற்போழுது வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் குறித்து இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

jailr

ரஜினியின் 170-வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை முன்னதாகவே ரஜினி கேட்டதாகவும் தற்போழுது அதற்க்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்ட்ரியாவின் ‘பிசாசு 2’ படத்தின் இரண்டாவது சிங்கிள் – இதயத்தை வருடும் !

லைகா நிறுவனம் தயாரித்துள்ள டான் திரைப்படம் 125 கோடி வசூல் சாதனை படைத்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top