ரஜினி, கமலுடன் இணையும் முதல்வர் ! பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவிற்கு வருகை!

மணிரத்னம் இயக்கியுள்ள வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் பெரும் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலைத்தழுவி தான் படம் உருவாகிறது.

ponn 2

இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் சிங்கிள் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பொன்னி நதி’ பாடல் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பாடலின் புதிய போஸ்டரை வெளியிட்டன. இசைப்புயல் பாடியிருக்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

ponnin 2

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் 6-ம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களை இயக்குனர் மணிரத்னம் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

stalin 16606461323x2 1

இந்நிலையில் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இசை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாகவும் அதில் படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment