கமலுக்கு போட்டியாக சம்பளத்தை உயர்த்திய ரஜினி! அடுத்த படத்தில் பிரம்மாண்ட சம்பளமா?

நடிகர் ரஜினி சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.

படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் குறித்து தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ரஜினியின் 170-வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NTLRG 20220827164858843205 1 1 1

ரஜினி 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக 90களில் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் அரவிந்த் சாமியிடன் பேசப்பட்டு வருகின்றனர். தற்போழுது இந்த படத்தை பற்றிய எதிர்பாராத ஷாக்கிங் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

மீண்டும் இணையும் அட்லீ-விஜய் கூட்டணி! படத்தின் பட்ஜெட் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி, தனது 170 படத்தில் ரஜினிக்கு ரூ.120 கோடி சம்பளமாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினி நடிப்பில் இறுதியாக வெளிவந்த அண்ணாத்த படம் சரிவர வெற்றி பெறாமால் இருந்தாலும்தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கமல் இந்தியன் 2 படத்துக்காக ரூ.150 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment