Connect with us

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு…. ரஜினியின் மெகா பிளான்

News

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு…. ரஜினியின் மெகா பிளான்

4866e516447e7f561a04c7d2a71f4db9

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய ரஜினி மக்கள் மன்றம் தான் அரசியல் கட்சியாக மாற போவதாகவும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரபரப்பு இல்லை என்றால் இதற்குள் அவர் கட்சி ஆரம்பித்து இருப்பார் என்றும் இருப்பினும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்நிலையில் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது ’ரஜினிகாந்த் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் செய்தாலும் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்க 48 மணி நேரத்திற்கு சென்னை கடற்கரைச் சாலையில் திடீரென ஒரு உண்ணாவிரதம் இருப்பார் என்றும், அந்த உண்ணாவிரதத்தில் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளும் முக்கிய விஷயம் என்னவெனில் மக்கள் தயவுசெய்து ஜாதியை அடிப்படையாக வைத்து, மதத்தை அடிப்படையாக வைத்து ஓட்டு போட வேண்டாம் என்றும், நான் ஜாதி மதம் எல்லாம் கடந்து ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி உள்ளேன் என்றும், இந்த ஆன்மீக அரசியல் ஆதரவு தாருங்கள் என்று அவர் கேட்டு 48 மணிநேர உண்ணாவிரதம் இருப்பார் என்றும் அரசியல் விமர்சகர் தெரிவித்தார்.

மேலும் இந்த உண்ணாவிரதம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் இதுவரை ஓட்டு போடாதவர்கள் கூட ஓட்டு போடுவதற்கு கண்டிப்பாக வாக்குச்சாவடிக்கு வருவார்கள் என்றும் வரும் தேர்தலில் 100 சதவீதத்தை நெருங்கி வாக்குப்பதிவு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் அவர் கூறியவாறு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top