
பொழுதுபோக்கு
டில்லி பயணம் வென்ற ரஜினி! காரணம் என்னவாக இருக்கும்?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந் தற்போழுது நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கயுள்ளனர்.
தற்போது ‘ராக்கி’, ‘தரமணி’ புகழ் இளம் ஹீரோ வசந்த் ரவியிடம் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்கயுள்ளார், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக இவர் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.ரஜினியின் ஜெயிலர் படத்தின் பூஜை ஆகஸ்ட் 10ஆம் தேதி நடத்த உள்ளதாகவும் முதலில் தகவல் வந்தது. ஆனால் அது தற்போழுது ஒரு மாத காலத்திற்கு தாமதமாவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்க்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, மேலும் படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் நடக்க இருந்ததாகவும் அதை தொடர்ந்து காரைக்கால் வரை உள்ள கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர். படத்தின் பிளாஸ் பக் காட்சிகள் அங்கு படமாக்கும் முடிவில் இருந்தனர்.
ஆனால் ஆந்திராவில் சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக் நடப்பதால் படத்தை திட்டமிட்டபடி நடித்த முடியவில்லை இதனால் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த எண்ணி உள்ளனர். இதற்கான ஜெயிலர் படக்குழு டில்லிக்கு சென்றுள்ளனர்.
கமலுடன் இணையும் சிம்பு ! எந்த படத்தில் தெரியுமா?
