ரஜினி அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போழுது ரஜினியின் 169 வது படமான ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியுள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கயுள்ளனர். மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ரஜினியுடன் படத்தில் இணையயுள்ளார்
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் ,பிரியங்கா மோகன் மகளாக நடிகயுள்ளதாகவும் கூறப்படுகிறது .படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர்.
படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் பனி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் யோகி பாபுவும் இணைந்திருக்கிறார்.
இந்நிலையில் இந்தப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது, படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த உள்ளதாகவும் ,இதில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் இந்த நிகழ்வை சிறப்பிக்க முஹுரத் பூஜை நடைபெறும்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் படத்தின் மாஸான ட்ரைலர் இதோ!
இந்த படம் ஒரு அதிரடி திரில்லர் என கூறப்படுகிறது, படத்தில் ரஜினி முதன்மை ஜெயிலராக நடித்துள்ளார். இந்த தகவல் ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சிக்கு தள்ளியது , படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.