ரஜினிகாந்த் தற்போது தனது அடுத்த மெகா படமான ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார், இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் தரமணி மற்றும் ராக்கி புகழ் வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் பிரபல மலையாள நடிகர் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்துடன் மூன்றாவது முறையாக மீண்டும் நடிக்கும் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளது ஜெயிலர். தயாரிப்பாளர்கள் ஜெயிலரின் அறிவிப்பு தீம் இசையை சமீபத்தில் யூடியூப் மற்றும் பிற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் ஜெய் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு வில்லனாக ஜெய்யை நடிக்க தான் இந்த படத்தில் கமிட் செய்யப்பட்டதாக ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்தை பற்றி அப்டேட் வந்து ரசிகர்களை ஆர்வத்தில் ஆழ்த்துகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது, ரஜினிகாந்த் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் காட்சி மற்றும் மற்ற சக நடிகர்களுடன் பேசி நடிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
வெந்து தணிந்தது காடு 2 பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கௌதம் மேனன் !
முன்னதாக விஜய் நடித்து வரும் வாரிசு படத்திலும் இதே பிரச்சனைதான் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வீடியோக்கள் போட்டோகள் வெளிவருவது வழக்கம், தற்போது அது ரஜினி நடிக்கும் படத்திலும் நிகழ்ந்து வருகிறது.