’பாபா’ படத்தின் ரன்னிங் டைம் குறைப்பு: எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில் 20 ஆண்டுகள் கழித்து இந்த படம் மீண்டும் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

baba14

சமீபத்தில் இந்தப் படத்தின் டிஜிட்டல் செய்யப்பட்ட ட்ரெய்லர் வெளியான நிலையில் அந்த டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் அதே சமயம் ஒரு சிலர் இந்த டிரைலரை கேலியும் கிண்டலும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிஜிட்டல் முறையில் ’பாபா’ திரைப்படம் மாற்றம் மீண்டும் எடிட்டிங் செய்யப்பட்டதாகவும் ஒரு சில காட்சிகளுக்கு மீண்டும் பின்னணி இசை அமைக்கப்பட்டதாகவும் ரஜினி உள்பட முக்கிய நடிகர்கள் டப்பிங் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

baba1 1

இந்த நிலையில் தற்போது ரிலீஸ் செய்ய உள்ள ’பாபா’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் என தகவல் வெளியாகி உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ’பாபா’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 59 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது . எனவே 24 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்பதால் இந்த படம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்த இந்த படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கி உள்ளார் என்பதும் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews