Connect with us

பெண்களை தப்பாக காட்டியது ரஜினி படங்களா!!.. சர்ச்சையில் சிக்கிய R J பாலாஜி!!..

balaji rajinikanth

Entertainment

பெண்களை தப்பாக காட்டியது ரஜினி படங்களா!!.. சர்ச்சையில் சிக்கிய R J பாலாஜி!!..

கல்லூரி மேடை ஒன்றில் தலைவர் படங்களை விமர்சித்த ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை எழுப்பியுள்ளது. ஆர்ஜே பாலாஜி தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். நடிகர் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பயணித்து வரும் ஆர் ஜே பாலாஜி தற்போது பாலிவுட்டின் மிகப்பெரிய ஹிட் அடித்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார்.

balaji

நகைச்சுவை நடிகர் ஹீரோ என தமிழ் சினிமா ரசிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாலாஜி சென்ற ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஓடிடி ரிலீசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது பாலிவுட்லில் ஹிட் அடித்த படத்தின் மூலம் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேஷம் இயக்கி நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ரிலீஸ் செய்ய தனியார் கல்லூரி ஒன்றில் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆர் ஜே பாலாஜி நடிகர் ரஜினி நடித்த படங்களில் பெண்களை எந்த அளவுக்கு தரக்குறைவாக சித்தரித்து உள்ளனர் என்பதை மேடையில் பேசி உள்ளார்.

balagi

இதுதான் பசங்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமூகத்தில் மிகப் பெரிய வேற்றுமை உருவாக காரணமே என்று அவர் கூறினார். படையப்பா, மன்னன் படத்தில் வீட்டில் வேலை செய்கிற பெண்ணை நல்லவை என்றும் வெளிநாட்டில் படித்த பெண்ணை தவறாகவும் காட்டி இருப்பார்கள் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்த நேர்கொண்டபார்வை படத்தை பாராட்டியும் பாலாஜி பேசியுள்ளார்.

அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா கீர்த்தி சுரேஷ்.. அதிர்ச்சி தகவல்!!..

ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தையும் பள்ளி கல்லூரிகளில் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது என பிரித்து வைப்பது தவறு என்கின்ற கருத்தை முன்வைத்து பேசும்போது படையப்பா மற்றும் மன்னன் படங்களை உதாரணமாகக் கொண்டு ஆர் ஜே பாலாஜி பேசியிருப்பது தலைவர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top