ரஜினி, கமல் இணைந்து கலந்து கொள்ளும் ‛பொன்னியின் செல்வன்’ பாடல் வெளியீட்டு விழா!

மணிரத்னம் இயக்கியுள்ள வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் பெரும் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலைத்தழுவி தான் படம் உருவாகிறது.

இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

ponniyin selvan movie official release date announed photos pictures stills

சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் சிங்கிள் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பொன்னி நதி’ பாடல் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பாடலின் புதிய போஸ்டரை வெளியிட்டன. இசைப்புயல் பாடியிருக்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

ponni nathi 1

இந்த பாடல் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு ஐதராபாத்தில் நடைபெறயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் டிவி செட்டிலே திருமணம் முடித்து கொண்ட பாவனி -அமீர்! வைரலாக வீடியோ!

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் 6-ம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களை இயக்குனர் மணிரத்னம் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment