பணமோசடி வழக்கு-போலீஸ் விசாரணைக்கு ராஜேந்திரபாலாஜி ஆஜர்!

திமுக ஆட்சிக்கு வந்தபின்பு தமிழகத்தில் அதிக அளவு வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், இடங்களில் வருமான வரித்துறை சோதனை அதிகமாக நடைபெற்றது.

அந்த சோதனையின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரைத் தேடி பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் ராஜேந்திர பாலாஜி ஓசூர் அருகே மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பண மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

பண மோசடி வழக்கில் ஜனவரி 5ஆம் தேதி கைதான ராஜேந்திரபாலாஜி நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போலீசாரின் விசாரணைக்கு தற்போது ஆஜராகியுள்ளார்.

அதன்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆஜராகியுள்ளார். பண மோசடி தொடர்பாக ராஜேந்திர பாலாஜியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment