Connect with us

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழா: முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!

Tamil Nadu

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழா: முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!

22a44b8efd5927ab8e82bfe031f8c76d-1

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழா என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் தஞ்சையை மட்டுமின்றி தென்கிழகு நாடுகளையும் ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மாபெரும் மன்னராக விளங்கிய ராஜேந்திர சோழன் அவர்கள் தனது காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற கோயிலைக் கட்டினார் என்பதும் அந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆடி திருவாதிரை தினம் அன்று ஒவ்வொரு ஆண்டும் பொது மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி ஆடி திருவாதிரை தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அடுத்த ஆண்டில் இருந்து மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை பிரமாண்டமாக அரசே கொண்டாடும் என்றும் அவர் தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

51a38f479f09e1ef2b8722c1a4afb6e9

70025506be1bddb234b0fcd14b49300b-1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top