ராஜேந்திர பாலாஜி எங்கே? தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரியில் இருக்கலாம் என சந்தேகம்; அதிமுகவினரிடம் தனிப்படை விசாரணை!

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மற்றும் வருமான வரித்துறையின் சோதனைகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜேந்திர பாலாஜி

ஒரு சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் வரிசையில் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் தினம்தோறும் அவர் மீது புது புது பண மோசடி வழக்குகள் வந்து கொண்டே உள்ளன. இதனால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கே என்று அதிமுகவினரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜிக்கு உதவி செய்த புகாரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. அதிமுக ஐ.டி பிரிவு துணைச் செயலாளர் விக்னேஸ்வரன் மற்றும் மகளிர் பாசறை செயலாளர் ஏழுமலையிடம் விசாரணை நடைபெறுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூரில் எங்கேயாவது ராஜேந்திர பாலாஜி பதுங்கி இருக்கலாம் எனவும் சந்தேகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment