Connect with us

2வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார் ராஜேந்திர பாலாஜி!!

rajendrabalaji013 1607335586 1615436357 1617533497

தமிழகம்

2வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார் ராஜேந்திர பாலாஜி!!

2வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார் ராஜேந்திர பாலாஜி!!

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இரண்டாவது முறையாக விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தின் ஆஜரானார்.

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாயை மோசடி செய்ததாக கூறிய வழக்கில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த ஜனவரி – 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜனவரி 13-ஆம் தேதி வெளியே வந்தார். இதனையடுத்து எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் விசாரணைக்கு வருவதாக ராஜேந்திர பாலாஜி வழக்கறிஞர் விருதுநகர்  குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடிதம் தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் ராஜேந்திர பாலாஜி கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு அழைத்ததில் ஆஜர் ஆனார். அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று ஆஜர் ஆகியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top