கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவினில் வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது.
ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்ததால்தான் கைது செய்யப்படுகிறார் அத்தனையும் பொய் புகார் என அதிமுகவினரால் கூறப்பட்டது.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இவரை தேடி பல்வேறு இடங்களில் போலீஸ் தீவிர தேடுதல் நடத்தியது.
இறுதியாக இவர் கர்நாடகா மாநிலம் அருகே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் முதலில் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டு பின்பு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜாமீன் வழங்க கோரி கோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜிக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.
அதனால் சற்று முன் திருச்சி மத்திய சிறையில் இருந்து ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்