கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்தான் ராஜேந்திர பாலாஜி .இவர் பால்வளத்துறையில் பல்வேறு ஊழல்கள் செய்தார் எனவும் ஆவின் உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்களில் வேலை தருவதாக சொல்லி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
அது போல தற்போதைய முதல்வரும் அப்போதைய திமுக தலைவருமான ஸ்டாலினை நாகரீகமற்ற வகையிலும் மிக மோசமாகவும் விமர்சனம் செய்து வந்தார்.
இப்படி பல்வேறு வழக்குகளால் நிலைகுலைந்த ராஜேந்திர பாலாஜி சினிமாக்களில் வரும் காட்சிகள் போல இடங்களுக்கு ஓடிக்கொண்டு திரிந்தார்.
இவரை பிடிப்பது என்பது மிகவும் சவாலாகவே இருந்தது இவரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு வழியாக அவரது இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்ததை வைத்து அவரை அங்கு கைது செய்தனர்.
அரசியல்வாதிகள் எல்லாருமே ஏதாவது குற்றம் செய்துவிட்டால் கர்நாடக மாநிலத்தை ஒட்டிய இடங்களையே தலைமறைவாக தேர்ந்தெடுக்கின்றனர்.
ஓசூர் தமிழ்நாடு என்றாலும் கர்நாடகத்தை ஒட்டிய இடத்தில் உள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் பெண் பாலியல் வழக்கில் பெங்களூரு அருகேதான் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.