Connect with us

சிம்புவை நினைத்து கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர்! எதற்காக தெரியுமா?

டி.ராஜேந்தர்

Entertainment

சிம்புவை நினைத்து கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர்! எதற்காக தெரியுமா?

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரனுக்கு சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டபோது அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அங்கு பரிசோதனை செய்ததில் வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பாதக மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக அவருடைய மகன் சிலம்பரசம் மற்றும் குடும்பத்தினர் விசா எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர்.

இதனிடையே அமெரிக்கா செல்ல விசா கிடைத்த நிலையில் அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தரன் தனது மகன் வெளிநாடு சென்று சிகிச்சை பெற வற்புறுத்தியதின் காரணமாக அமெரிக்கா செல்வதாக தெரிவித்தார்.

இதற்காக வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் ஆடியோ ரிலீசை தள்ளி வைத்து, 10 தல படப்பிடிப்பு தள்ளிவைத்து கிட்டத்தட்ட 12 நாட்களாக அமெரிக்கா சென்று தன்னுடைய குடும்பத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் சிலம்பரசனை அடைந்த ஜென்மம் பெரிய பாக்கியம் என கூறியுள்ளார்.

மேலும், தான் பெற்றெடுத்த மன்மதனாக மட்டுமில்லாமல் மகனாக இருப்பதால் வாழ்க்கையில் வல்லவனாக மட்டுமில்லாமல் நல்லவனாக இருப்பதாக கூறி கண் கலங்கிய சம்பவம் அனைவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top