மகள் கண் முன்னே தந்தை பலி: ராஜஸ்தானில் பரபரப்பு!!

ராகஸ்தானில் மகள் கண்முன்னே தந்தை துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களை பொறுத்தவரையில் ரவுடிகளின் தாக்குதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் வசித்து வருபவர் தாராசந்த் காட்ஸ்வாரா.

இவர் தன்னுடைய மகளுடன் சாலையில் அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த ரவுடி கும்பல் ஒன்று தனது கையில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து தாராசந்தை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இத்தகைய விபத்து அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழலில் சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.