ராஜஸ்தானில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு: ஜனவரி 7 ஆம் தேதி காலை 5 மணி முதல் அமல்!

ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு வருகின்றன. ஏனென்றால் இந்தியாவில் கொரோனாவின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒமைக்ரான் தொற்றும் மிக வேகமாக பரவுகிறது.

இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் அரசியல், பேரணிகள் திருமணங்களில் மக்கள் பங்கேற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 7ஆம் தேதி முதல் காலை 5 மணி முதல் இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்று தகவல் கிடைத்துள்ளது. அரசியல் பேரணிகள், போராட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் திருமணங்களில் 100 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் பொறுத்தவரை 20 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பள்ளிகளில் 1 முதல் எட்டாம் வகுப்புகளை ஜனவரி 9ஆம் தேதி வரை மூட வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment