கோலிவுட்டில் சங்கர் எப்படி பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படுகிறாரோ அதேபோல் டோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் ராஜமெளலி தான். இவரது கதைகள் அனைத்துமே பிரம்மாண்டமாக இருக்கும். அதைவிட சிறப்பு அனைத்து ரசிகர்களும் இவரின் படங்களை ரசிப்பது தான்.
முன்னதாக இவர் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் இந்திய சினிமாவின் பெருமை என்றே கூறலாம். ஒட்டுமொத்த உலக சினிமாவையும் தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த படம் தான் பாகுபலி.
இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ஆர்ஆர்ஆர். இப்படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்திற்கு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேபோல் படத்தின் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் ஆர்ஆர்ஆர் படம் பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜமெளலி அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி இயக்குனர் ராஜமௌலி கூறியதாவது, “நான் அடுத்ததாக மகாபாரத்தத்தை படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இன்னும் 10 மாதங்களில் மகாபாரதம் படத்தின் பணிகள் தொடங்கும். அதிலும் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோருக்கு கதாப்பாத்திரங்கள் உள்ளது” என கூறியுள்ளார். எனவே ரசிகர்கள் தற்போதே அப்படம் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய தொடங்கி விட்டார்கள்.