ராஜ் குந்த்ராவுக்கு மேலும் 14 நாட்கள் காவல்: கணவரை திட்டிய ஷில்பா ஷெட்டி!

4fc7458cd5a57821d3e5c7398872727e

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மேலும் 15 நாட்கள் காவலில் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் 

வெளிநாட்டு செயலி ஒன்றுக்கு ஆபாச படங்களை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ராஜ்குந்த்ரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவரை மேலும் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து போலீசார் ஷில்பா ஷெட்டியின் விசாரணை செய்தபோது அவர் தனது கணவரை திட்டியதாக தெரிகிறது. தன்னுடைய பெயரையும் புகழையும் கணவர் கெடுத்துவிட்டார் என்றும் தான் இத்தனை வருடங்களாக காப்பாற்றி வந்த நம்பிக்கையை அவரது ஒரே ஒரு செயலால் இழந்து விட்டது என்றும் தனது பார்ட்னர் அனைவரும் தன்னிடமிருந்து விலகி விட்டதாகவும் அவர் சோகமாக கூறியுள்ளார் 

இந்த நிலையில் ராஜ்குந்த்ராவை ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment