Connect with us

மீண்டும் நாயகியாகும் பிக்பாஸ் ரைசா வில்சன்: இயக்குனர் யார் தெரியுமா?

Entertainment

மீண்டும் நாயகியாகும் பிக்பாஸ் ரைசா வில்சன்: இயக்குனர் யார் தெரியுமா?

d18d215ffd17cda1f47e1945423f78bc-1-2

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று கமல்ஹாசன் உள்பட பலர் கூறிவந்தனர். ஆனால் பிக்பாஸ் டைட்டில் வென்றவர்களுக்கு கூட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மைநிலையாக உள்ளது.

இருப்பினும் ஒரு சில போட்டியாளர்கள் மட்டும் விதிவிலக்காக திரையுலகில் ஒருசில வாய்ப்புகளை பெற்றனர் அந்த வகையில் நடிகை ரைசா வில்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் உடன் ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்த ரைசா வில்சன் தற்போது கார்த்திக் ராஜூ இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே தினேஷ் நடித்த ’திருடன் போலீஸ்’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கி உள்ளார் என்பதும் தற்போது ரெஜினா நடித்துள்ள ’சூர்ப்பநகை’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது இருப்பினும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது

ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவில் சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஆப்பிள் ஜூஸ் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top