மழை முடிந்தது.. இனி வறண்ட வானிலை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் மழை முடிந்தது என்றும் இனி வறண்ட வானிலை தான் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வந்தது என்பதும் குறிப்பாக இரண்டு அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நல்ல மழை பெய்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை அருகே கரையை கடந்த நிலையில் இனி மழைக்கு பெரிய வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை வறண்ட வானிலை தான் நிலவக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது குளிர் அதிகமாக இருக்கும் காரணத்தினால் மழைக்காலம் முடிந்து விட்டது என்றும் கூறப்படுகிறது. ஜனவரி முடிந்து பிப்ரவரி தொடங்கினால் வெயில்காலம் தொடங்கிவிடும் என்பதால் பொதுமக்கள் வெயிலை சந்திக்க தயாராக வேண்டும் என்பது அறிவுறுத்தப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.