Connect with us

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Tamil Nadu

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

d60cccbdbc56c903c701cb596bfabf75

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்றும் நாளையும் மழை ஒரு சில இடங்களில் மட்டுமே பெய்யும் என்றும் மற்ற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது 

ஆனால் அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன என்பதும் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தண்ணீர் கஷ்டம் என்பதே இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் அதிக அளவு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top