மழை பெய்யும் மாவட்டங்கள்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

d60cccbdbc56c903c701cb596bfabf75

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்றும் நாளையும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் பகுதிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

இன்று அதாவது ஜூலை 16ஆம் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், நாளை அதாவது ஜூலை 17ஆம் தேதி நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 18 19 ஆகிய தேதிகளில் வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment