Connect with us

வீட்டிற்குள் புகுந்த மழைநீர்… மூதாட்டி இருவர் பலி!!!

death

தமிழகம்

வீட்டிற்குள் புகுந்த மழைநீர்… மூதாட்டி இருவர் பலி!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு கால்வாய் பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இந்நிலையில் சேலம் கோவிந்த கவுண்டர் தோட்டம், சாமிநாதபுரம் பகுதிகளில் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது. இதன் காரணமாக மூதாட்டி ருக்குமணி(70), பழனியம்மாள்(80) ஆகியோரின் வீட்டிற்குள் உறங்கிகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக மழை நீர் வீட்டிற்குள் புகுந்ததால், மழை நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இறந்த மூதாட்டியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதேபோல் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. அப்பகுதிகளில் தண்ணீர் அதிகளவு இருப்பதால், தண்ணீரை முழுமையாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மழைநீரில் மூழ்கியது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top