மழைநீர் வடிகால் பணி… தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி!!

சென்னை பிரபல தனியார் தொலைகாட்சியில் பணியாற்றும் ஊழியர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் நேற்றைய தினம் பணியை நிறைவுசெய்த பிறகு, வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்துள்ளார்.

அப்போது கம்பிகள் முத்துக்கிருஷ்ணன் உடலை கிழித்து படுகாயமடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரூ. 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணம்: அல்லு அர்ஜுன் திட்டவட்டம்!!

பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய தகவல் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை விரைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

தீபாவளி! பூக்களின் விலை கடுமையாக உயர்வு..!!

மேலும், காவல்துறையினர் சார்பில் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி ஊழியர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment