வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் மழை குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

caa35d06ff4fdb235ef6563b7509fd3d

தற்போது தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனால் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார் 

நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறுகையில் ’வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், வரும் 11ம் தேதி வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி உருவாகும் பட்சத்தில் தமிழகத்தில் மழை வாய்ப்பு வெகுவாக குறையும் என்று தெரிவித்தார் 

தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு இந்த் ஆண்டு அதிகமாக கிடைத்துள்ளது என்றும் வழக்கமாக இந்த பருவ காலத்தில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 130 சென்டிமீட்டர் மழை மட்டுமே தமிழ்நாட்டில் பெய்யும் என்றும் ஆனால் இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 9 வரை மட்டுமே 127 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் வரும் காலங்களில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடையும் என்பதால் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி ஒட்டிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் அதேபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment